அநுரவால் டில்லியை கையாள முடியுமா?

சவால்மிக்கது. இந்தியாவின் திட்டங்களை கடுமையாக எதிர்த்த தரப்பாக அநுர தரப்பு உள்ளது. ஏற்கனவே செய்துக்கொள்ளப்பட்டுள்ள உடன்படிக்கைகளுக்கு என்ன நடக்கப் போகிறது? உத்தேச திட்டங்களுக்கு என்ன நடக்க போகிறது? எதிர்காலத் திட்டங்கள் என்னவாக இருக்கும்? என பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்பட்டாலும், இந்தியாவை பகைத்துக்கொண்டு இலங்கையால் ஒரு அடியேனும் முன்னோக்கி நகர முடியாதென்பதே இன்றைய பூகோள மற்றும் இந்தோ – பசுபிக் பிராந்திய அரசியல்.

இந்தோ – பசுபிக் பிராந்தியத்தில் இலங்கை வளர்ச்சியடையும் பொருளாதாரமாக மாற வேண்டும் என்றால், இந்தியாவின் சில நிபந்தனைகளுக்கு கட்டுபட்டே ஆக வேண்டும். உலக வல்லரசாக இந்தியா இன்னமும் மாறவில்லை என்றாலும், பிராந்தியத்தில் இந்தியாவை எதிர்க்கும் நாடுகளின் நிலைகள் மிகவும் மோசமாகவே உள்ளன. அதனால் அநுர அரசு இந்தியாவின் எண்ணங்களுக்கு அப்பால் செல்ல முடியாது. சில பழையத் திட்டங்களையும் உடன்படிக்கைகளையும் அவ்வாறே தொடர வேண்டும் என்பது யதார்த்தம்.

அநுரவின் பயணம் அதனால்தான் மிக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. தேர்தல் மேடைகளில் அவர்கள் பேசிய அனைத்தையும் செய்ய முடியாது. ஆட்சிமாற்றத்தின் பின்னர் அரசாங்கத்தின் சில செயல்பாடுகளும் அவ்வாறுதான் உள்ளன. டில்லியை அன்பாக அனுசரித்து சென்றால் அநுரவால் இலகுவாக கையாள முடியும். இல்லாவிட்டால்?

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *