‘தேங்காய்’ எதிரிகளுடன் வெளிநாட்டவர் மகிழ்ச்சி’
நாட்டில் தேங்காய்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. தேங்காய் ஒன்று, 220 ரூபாய் முதல் 300 ரூபாய் வரைக்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சில கடைகளில் அரை மூடி தேங்காயும் தற்போது விற்பனை செய்யப்படுகிறது. தேங்காய் சம்பலை காணக்கிடைப்பது அரிதாகவே உள்ளது.
தேங்காய் தட்டுப்பாட்டுக்கு பிரதான காரணமாக குரங்குகளை பலரும் குற்றஞ்சாட்டுகின்றனர். பாராளுமன்றத்தில் அண்மையில் உரையாற்றிய விவசாயம், கால்நடை வளர்ப்பு அமைச்சர் லால் காந்த “குரங்கு பயங்கரவாதம்” நாட்டில் தலைதூக்கி விட்டது எனக் குறிப்பிட்டிருந்தார்.
எனினும், குரங்குகள் தேங்காய்களை உண்பதால் தேங்காய் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக இந்த அரசாங்கம் கூறுகிறது . அவ்வாறானால் கடந்த ஆண்டு நாட்டில் குரங்குகள் வாழவில்லையா? எனவே? குரங்குகளை குற்றவாளிகளாக்க வேண்டாம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் எம்.பி.யான டி.வி.சானக கேட்டுக்கொண்டிருந்தார்.
இந்நிலையில், இராவணா எல்ல வனவிலங்கு சரணாலயத்திற்கு அருகில் உள்ள ராவணா எல்ல நீர்வீழ்ச்சிக்கு அருகில் குரங்குகளுடன், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியாக இருக்கின்றனர்.
![]()