லண்டனில் நடந்தது குற்றம்; இலங்கையில் பாய்ந்தது சட்டம்; கிளிநொச்சி வாசி கைது
பிரித்தானியாவில் பயங்கரவாத அமைப்புக்கு பணம் சேகரித்த கிளிநொச்சியைச் சேர்ந்த ஒருவரை கட்டுநாயக்கா விமான நியைத்தில் வைத்து சனிக்கிழமை கைது செய்துள்ளாக விமான நிலைய பொலிஸார் தெரிவித்தனர்.
கிளிநொச்சி பிரதேசத்தை சேர்ந்த 43 வயதுடைய ஒருவர் 2009 ஆம் ஆண்டு நாட்டை விட்டு வெளியேறிச் சென்று பிரித்தானியாவில் தஞ்சமடைந்து அந்த நாட்டு குடியுரிமை பெற்றதுடன் அங்கு தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புக்கு பணம் சேகரித்து அந்த பணத்தை கொழும்பு மற்றும் வன்னி பிரதேசத்தில் விநியோகித்துள்ளார்.
இவருக்கு எதிராக கொழும்பு வடக்கு குற்றத் தடுப்பு பிரிவினர் கொழும்பு நீதவான் நீதிமன்றில் பயணத்தடை உத்தரவை பெற்றிருந்தனர். இந்த நிலையில் அவர் பிரித்தானியாவில் இருந்து இலங்கை கட்டுநாயக்கா விமான நிலையத்தை நேற்று முன்தினம் சனிக்கிழமை வந்தடைந்தபோது அவரை குடிவரவு மற்றும் குடியகல்வு பிரிவினர் பொறுப்பேற்று விமான நிலைய பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து கட்டுநாயக்கா விமான நிலைய பொலிஸார் அவரை விமான நிலையத்தில் வைத்து கைது செய்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை விமான நிலைய பொலிஸார் மற்றும் கொழும்பு வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
![]()