ஐஸ்லாண்ட் யானை மலை
ஐஸ்லாண்டில் உள்ள இந்த பெரும் ஒற்றைப்பாறை அச்சுஅசலாக ஒரு யானையை போல் உள்ளது. ஒரு புறம் அதன் தலை மட்டும் அல்ல மேலிருந்து பார்த்தால் யானை படுத்திருப்பது போலான தோற்றமும் அட்டகாசம்.
வெஸ்ட்மேன் தீவுக்கூட்டத்தில் உள்ள ஹெய்மேய் தீவில் இந்த இயற்கையான பாறை அமைந்துள்ளது. இது முற்றிலும் பசால்ட் ரக பாறையாக உள்ளது.
ஐஸ்லாந்திய நாட்டுப்புறக் கதைகள் பாறையின் தோற்றம் பற்றிய பல்வேறு விளக்கங்களை வழங்குகிறது.
ஒரு காலத்தில் தெய்வங்களால் தண்டிக்கப்பட்ட உண்மையான யானை தான் பின்னாட்களில் பாறையாக மாறியதாக ஒரு கதை கூறுகிறது. நீரின் விளிம்பில் ஓய்வெடுத்த பிறகு, உயிரினம் நித்திய தூக்கத்தில் விழுந்து கல்லாக மாறியது என்கிறது மற்றொரும் கதை.
மனித கைகள் யானை வடிவத்தை செதுக்கியிருக்கலாம் என்றும் ஒரு சாரார் கூறுகிறார்கள்.
எப்படியிருப்பினும் கதைகளால் வளர்நத இந்த உலகத்தில் இந்த யானைக்கும் பல கதைகள் இருப்பது இயல்பு தானே.
![]()