பெண்ணிடம் ரூ.1.7 லட்சம் மோசடி ஆடையை கழற்றச் சொல்லி அட்டூழியம்

மஹாராஷ்டிராவில், ‘டிஜிட்டல் கைது’ எனக் கூறி, இளம்பெண்ணிடம் 1.7 லட்சம் ரூபாய் மோசடி செய்த மர்ம நபர்கள், சோதனை என்ற பெயரில், அந்த பெண்ணின் ஆடைகளை கழற்றச் சொல்லி அட்டூழியத்தில் ஈடுபட்டது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இணைய வழி மோசடி கும்பலைச் சேர்ந்தவர்கள், சமீப காலமாக, ‘டிஜிட்டல் கைது’ எனப்படும் சைபர் குற்றத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அரசு அதிகாரிகள், மத்திய விசாரணை அதிகாரிகள் போல் தங்களை காட்டிக் கொள்ளும் மர்ம நபர்கள், ஆடியோ, வீடியோ அழைப்புகள் வாயிலாக, மக்களை தொடர்பு கொண்டு மிரட்டி, பணம் பறிக்கின்றனர். இந்த கும்பலுக்கு பயந்து, மக்களும் பணத்தை இழந்து வருகின்றனர்.

மத்திய விசாரணை அமைப்புகளின் அதிகாரிகள் இது போன்ற செயலில் ஈடுபட மாட்டார்கள் என, அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டாலும், மோசடி கும்பலிடம் தொடர்கதையாக உள்ளது.

மஹாராஷ்டிரா தலைநகர் மும்பையைச் சேர்ந்த 26 வயது இளம்பெண் ஒருவருக்கு, கடந்த 19ல் மொபைல் போனில் புதிய எண்ணில் இருந்து அழைப்பு வந்தது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *