முச்சந்தி

இளம் குடும்பப் பெண்மண் எண்ணெய் ஊற்றி தீயில் எரிந்து மரணம்

வவுனியா, செட்டிகுளம் பகுதியில் குடும்பப் பெண் ஒருவர் மண்ணெண்ணெய் ஊற்றி தீயில் எரிந்து மரணமடைந்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, செட்டிகுளம் – பெரியகுளம் பகுதியில் வசித்து வந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் இரவு வீட்டில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து எரிந்த நிலையில் அயலவர்களால் மீட்கப்பட்டு செட்டிகுளம் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவர் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.

எனினும், அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். சம்பவத்தில் செட்டிகுளம், பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த 29 வயது இளம் குடும்பப் பெண்ணே மரணமடைந்தவராவார்.

அவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை செட்டிகுளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *