இந்தியா

குற்றவாளிகளின் சொர்க்க பூமியாக மாறிய தமிழகம்; எடப்பாடிவிசனம்

‘தமிழகத்தை குற்றவாளிகளின் சொர்க்கபூமியாக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க, அரசு மாற்றியுள்ளது’ என அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சுமத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் ”திருப்பூர் மாவட்டம் சேமலைக் கவுண்டம்பாளையத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியளிப்பதாகவும், தி.மு.க, ஆட்சியில் குற்றவாளிகளுக்கு துளியும் பயமில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் குறித்த ஆட்சியில் நடக்கும் தொடர் குற்றங்களால் மக்கள் அச்சமடைந்துள்ளதாகவும் எடப்பாடி குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தமிழகத்தை குற்றவாளிகளின் சொர்க்க பூமியாக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க, அரசு மாற்றி உள்ளது எனவும், இதற்கு தான் கடுமையாகக் கண்டனம் தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இக்கொலையுடன் தொடர்புள்ள அனைவரையும் கைது செய்து உரிய சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், சட்டம் ஒழுங்கைக் காக்க இனியாவது செயல்படுமாறும் முதலமைச்சரை தான் வலியுறுத்துவதாகவும் எடப்பாடி பழனிச்சாமி குறிப்பிட்டுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *