அர்ஜுன மகேந்திரனுக்கு அழைப்பாணை!

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.

2015 ஆம் ஆண்டு இலங்கை மத்திய வங்கியின் சர்ச்சைக்குரிய பிணைமுறி விவகாரம் மூலம் அரசாங்கத்திற்கு 10 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நட்டம் ஏற்படுத்தியதற்காக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைவாக இந்த அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விடுத்த கோரிக்கையை பரிசீலித்த கொழும்பு பிரதான நீதிவான் திலின கமகே, 2025 பெப்ரவரி 25 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு முன்னாள் மத்திய வங்கி ஆளுநருக்கு அழைப்பாணை உத்தரவை பிறப்பித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *