கோடிக் கணக்கில் பண மோசடி யாழில் பெண்ணுக்கு 35 ஆண்டுகள் சிறை

யாழ்ப்பாணத்தில் வெளிநாடுகளுக்கு அனுப்பிவைப்பதாக கூறி கோடிக்கணக்கான பணத்தைப் பெற்று மோசடியில் ஈடுப்பட்ட பெண்ணுக்கு 35 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக இளையோரிடம் பணத்தினை பெற்று மோசடி செய்து வந்தமை தொடர்பில் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் பெண்ணை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.

விசாரணைகளில், சுமார் 4 கோடி ரூபாவுக்கும் அதிகமான பணத்தினை மோசடியாக பெற்றமை, பண மோசடியில் ஈடுபட்டமை, அனுமதியின்றி வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவராக அடையாளப்படுத்தி மோசடியில் ஈடுபட்டமை உள்ளிட்டவை தெரியவந்துள்ளது.

பண கொடுக்கல் வாங்கல்கள் அனைத்தும் பெண்ணின் சொந்த கணக்கு இலக்கம் ஊடாகவே மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவற்றின் ஆதாரங்களுடன் பெண்ணை யாழ். மேலதிக நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் வழக்கு விசாரணைகள் நடைபெற்றுவந்தன.

இந்நிலையில், வியாழக்கிழமை நடைபெற்ற விசாரணைகளில் பெண் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட அந்தப் பெண்ணுக்கு 35 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *