முச்சந்தி

மன்னாரில் கடலில் மிதந்த பொதி: வெடித்ததால் மீனவர்களுக்கு காயம்

மன்னார் கடற்பகுதியில் கடலில் மிதந்து கொண்டிருந்த பொதியொன்று வெடித்துச் சிதறியதில் இரு மீனவர்கள் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அப்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் பொதியை பரிசோதிக்க முற்பட்ட போது திடீரென பொதி வெடித்துள்ளதாக இவர்களிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

வெடிப்பு சம்பவத்தில் பலத்த காயம் அடைந்த இருவரும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், மீன்பிடிக்க பயன்படுத்திய சட்டவிரோத வெடிமருந்து காரணமாக இந்த வெடிவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

வெடிவிபத்துக்கான சரியான காரணத்தை கண்டறிய மன்னார் பொலிஸாரும் இலங்கை கடற்படையினரும் இணைந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *