கின்னஸ் சாதனை படைத்த இரு பெண்கள் சந்திப்பு!

உலக கின்னஸ் சாதனை நாளின் 20 ஆம் ஆண்டு விழாவை  முன்னிட்டு, உலகின் உயரமான பெண்ணான துருக்கியின் ருமெய்சா கெல்கி (Rumeysa Gelgi) மற்றும் இந்தியாவின் ஜோதி அம்கே (Jyoti Amge) ஆகியோருக்கு இடையில் விசேட சந்திப்பொன்று  நேற்று இடம்பெற்றது.

குறித்த இருவரும் கின்னஸ் சாதனை ஐகான்களாக தேர்வு செய்யப்பட்ட நிலையில் லண்டனில் இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சந்திப்பின் போது ஆராய்ச்சியாளரான 7 அடி உயரம் கொண்ட ருமெய்சா ஆங்கிலத்திலும், 2 அடி உயரம் கொண்ட இந்தியாவின் ஜோதி அம்கே ஹிந்தியிலும் உரையாடியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *