செய்திகள்

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கைது

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கைது செய்யப்பட்டுள்ளார்.

வாக்குமூலமொன்றை பெற்றுக்கொள்வதற்காக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு.ஹரின் பெர்னாண்டோ பதுளை பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

பதுளை பொலிஸ் அதிகாரிகள் முன்னாள் அமைச்சரிடம் வாக்குமூலம் பதிவு செய்திருந்த நிலையில், தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

தேர்தல் காலத்தில் தேர்தல் விதிமுறைகளை மீறியமை தொடர்பில் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் அவரிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்ள அழைக்கப்பட்டிருந்தார்.

தேர்தல் அமைதி காலத்தில் பதுளை நகரில் அவர் ஊர்வலம் சென்று மேலங்கியை கழற்றி எரிந்து பொலிஸாருக்கு சவால் விடுத்த சம்பவம் தொடர்பில் இவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *