சுனிதா வில்லியம்ஸ் உடல்நிலை குறித்து பரவும் தகவல்

நீண்ட நாட்கள் விண்வெளியில் தங்கியதால், விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ் உடல் நிலையில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அவர் கடும் மன அழுத்தத்திற்குள்ளாகியுள்ளதாகவும் சமூக ஊடகங்களில் செய்திகள் பரவிவருகின்றன.

எட்டு நாட்களில் விண்வெளியிலிருந்து பூமிக்குத் திரும்பவேண்டிய சுனிதா, 150 நாட்களுக்குமேல் சர்வதேச விண்வெளி நிலையத்திலேயே தங்கிவிட்டதால், அவரது உடல் நிலையில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சமீபத்தில் ஒரு செய்தி வெளியானது.

சுனிதாவின் சக ஊழியரான நாசா ஊழியர் ஒருவர், கன்னங்கள் ஒட்டி, எலும்பும் தோலுமாய் சுனிதா காணப்படும் புகைப்படம் ஒன்றைக் கண்டு தான் மூச்சடைத்துப்போனதாக தெரிவிக்க, இணையம் பரபரப்பானது.

நாசா வெளியிட்டுள்ள புதிய புகைப்படம்

 

 

ஆனால், சர்வதேச விண்வெளி நிலையத்திலிருக்கும் அனைவரின் உடல் நிலையும் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், சுனிதா உட்பட அவர்கள் அனைவரும் நலமாக இருப்பதாகவும் நாசா தெரிவித்தது.

இந்நிலையில், வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில், சுனிதாவின் சமீபத்திய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது நாசா.

சமூக ஊடகமான எக்ஸில் பகிரப்பட்டுள்ள அந்த புகைப்படத்தில், சீருடையிலிருக்கும் சுனிதா, சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து பூமியைப் பார்க்கும் காட்சி இடம்பெற்றுள்ளதைக் காணலாம்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *