முள்ளிவாய்க்காலில் அஞ்சலி செலுத்தினார் தேர்தலில் வெற்றிபெற்ற துரைராசா ரவிகரன்

பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற துரைராசா ரவிகரன் இன்று வெள்ளிக்கிழமை (15) முள்ளிவாய்க்கால் நினைவு தூபிக்கு சுடரேற்றி மலர்தூவி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

நேற்று வியாழக்கிழமை (14) நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் வன்னி தேர்தல் தொகுதியில் தமிழரசுக்கட்சி சார்பாக போட்டியிட்டு மக்களின் அமோக ஆதரவுடன் வெற்றி பெற்றுள்ள துரைராச ரவிகரன் இன்றையதினம் காலை 11.15 மணியளவில் இறுதிப்போரில் உயிரிழந்த மக்கள் நினைவாக முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபிக்கு சென்று போரில் உயிரிழந்த மக்களுக்காக வணக்கம் செலுத்தியிருந்தார்.

வெற்றிவாகை சூடிய பாராளுமன்ற உறுப்பினரை முல்லைத்தீவு மக்கள் இன்று முல்லைத்தீவு நகரில் மாலை அணிவித்து வரவேற்றதுடன் வெடிகொழுத்தி வெற்றி கொண்டாடட்டத்தில் ஈடுபட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *