500 ரூபா நோட்டுகளில் சேர்ட் வியக்க வைத்த இளைஞர்

இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் பாகல்கோட் நகரைச்சேர்ந்த இளைஞர் ஒருவர் 500 ரூபா நோட்டுக்களால் சேர்ட் ஒன்றை வடிவமைத்து அணிந்து வந்து அசத்தினார்.

பாகல்கோட் மாவட்டம், முதோலின் சித்ரா பானுகோடி கிராமத்தைச் சேர்ந்த கல்லப்பா தல்வார், என்னும் 22 வயது இளைஞரே இவ்வாறு புதுமை செய்து அசத்தியவர். இக்கிராமத்தில், சச்சிதானந்த சகஜானந்த ராமாரூட சுவாமிகள் இரத உற்சவம் அண்மையில் நடந்தது.

இவ்விழாவில் அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்க்க வேண்டும் என்று இவர் முடிவு செய்த நிலையில் அதற்காக, தனது நண்பர்களுடன் ஆலோசனைசெய்துள்ளார்.

கர்நாடகாவின் வட மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் பெரும் தொகை தங்க நகைகளை அணிந்து, நடமாடி பிரபலமடைந்ததாக அறிந்தார்.

அதுபோன்று தானும் செய்ய தன்னிடம் அவ்வளவு தங்கம் இல்லாததால், ரூபா நோட்டுகள் மூலம் சட்டை அணிந்து செல்ல நண்பர்களுடன் ஆலோசனைசெய்து முடிவெடுத்தாராம்.

இரத உற்சவத்தில் இந்த சேர்ட்டை அணிந்து வந்த கல்லப்பாவை கிராமத்தினர் ஆச்சரியமாக பார்த்தனர். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவிவருகிறது.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *