ஒரு பறவை முயலை வேட்டையாடுமா?… ஆச்சரியத்தை உண்டாக்கிய வீடியோ

கடல் புறா முயலையே உயிரோடு வேட்டையாடி முழுங்கும் வீடியோ இணையவாசிகளை ஆச்சரியப்பட வைத்துள்ளது. தற்போது இது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

சமூக வலைத்தளங்களில் பரவும் பல வீடியோக்கள் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும். இன்றைய உலகில் தொழிநுட்பத்தின் வளர்ச்சி அதிகமாக உள்ளது. இதை மனிதர்களாகிய நாம் அதிகளவில் பாவனை செய்து வருகிறோம்.

இணையம் நினைத்தால் ஒரு மனிதனின் வாழ்க்கையை மாற்றலாம். பொதுவாக பொழுது போக்கிற்காக சமூக வலைத்தள பக்கத்தில் பல வீடியோக்களை நாம் பார்த்திருப்போம். இந்த வீடியோக்கள் கூடுதலாக மிருகங்களை வைத்து அதிகமாக வெளியிடப்படுகின்றது.

இன்று கொடுக்கப்பட்டுள்ள இந்த விடியோவில் இந்த வீடியோவை பார்ப்பவர்களுக்கே விநோதமாக இருக்கும். ஆம், கடற்புறா ஒன்று முயலை உயிரோடு வேட்டையாடி விழுங்குகிறது. கூடவே இன்னும் இரண்டு கடற் புறாக்கள் இருக்கின்றன.

கடலில் பொதுவாக மீன்களை வேட்டையாடி வாழும் கடற்புறா இப்போது நிலத்திலும் வேட்டையாட தொடங்கிவிட்டது. பொதுவாக கடல் புறாக்கள் மீனை தான் வேட்டையாடும். கடல் புறா முயலை வேட்டையாடுவது இதுவே முதல் தடவை. இந்த விடியோவை பார்த்த இணையவாசிகள் ஆச்சரியப்பட்டு தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *