ஜப்பானிய முறையில் மான்கள் வணக்கம் சொல்லுமா?

தற்போது இணையத்தில் ஜப்பானிய முறையில் வணக்கம் சொல்லும் மான்களின் வீடியோ வைரலாகி வருகின்றது. இதற்கு இணையவாசிகள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

இணையத்தில் பல விதமான வீடியோக்கள் வைரலாகி வருகின்றது. இது பல இடங்களில் இருந்து பல மொழிகளில் இருந்தும் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றது. இதில் நம் மனதை சிலவை நெகிழ வைக்கும்.

சிலவை நம்மை அதிர்ச்சியடைய வைக்கும். அப்படியான ஒரு வீடியோ தான் தற்போது வைரலாகி வருகின்றது. ஜப்பானில் இருக்கும் பூங்கா ஒன்றில் நரா என்ற மான் தன்னிடம் வந்து பேசுபவர்களிடம் ஜப்பானிய முறையில் வணக்கம் வைக்கிறது.

ஜப்பானியர்கள் யாரையாவது புதிதாக பார்த்தால் தலையை குனிந்து வணக்கம் சொல்வார்கள். அதே போல தான் ஒரு மானும் ஜப்பானிய முறையில் வணக்கம் சொல்கிறது. இதற்கு இணையவாசிகள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *