இந்தியாவுடன் கைகோர்க்கும் ரஷ்யா!

ரஷ்யாவில் 8,000 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்கள் விரைவில் இந்திய கடற்படையில் இணைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி ரஷ்யாவில் 2 போர்க்கப்பல்கள் தயாரிக்கப்பட்டுள்ளதுடன் வெள்ளோட்டமும் நிறைவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் எதிர் வரும் டிசம்பர் மாதம் முதல் போர்க்கப்பல் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் டிசம்பரில் ரஷ்யாவுக்கு சென்று புதிய போர்க்கப்பலை இந்திய கடற்படையில் இணைக்கவுள்ளார் எனவும் இதற்கு ஐ.என்.எஸ் துஷில் எனப் பெயரிடப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *