புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கியிருந்த கட்டிடம் இடிந்து வீழ்ந்ததில் 7 பேர் உயிரிழப்பு

லிபிய தலைநகர் திரிபோலிக்கு மேற்கே உள்ள ஜான்சூர் மாவட்டத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கியிருந்த கட்டிடம்  அவர்கள் தூங்கிக்கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.

எனினும், கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி பெண்கள், குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழந்தனர். அவர்கள் ஆப்பிரிக்காவை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. மேலும் சிலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள பொலிஸார், விசாரணை நடத்தி வருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *