டிரம்பை கொல்வதற்கு ஈரான் சதி – ஆப்கானை சேர்ந்தவருக்கு எதிராக குற்றச்சாட்டுகளை சுமத்தியது அமெரிக்கா

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலிற்கு முன்னர் டொனால்ட் டிரம்பினை கொலை செய்ய முயன்றார் என ஆப்கானை சேர்ந்த நபர் ஒருவருக்கு எதிராக அமெரிக்கா குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளது.

ஈரானின் கொலை முயற்சி தொடர்பிலேயே அமெரிக்கா குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளது.

51 வயது பர்ஹாட் சகேரிக்கு எதிரான குற்றச்சாட்டுகளை வெளியிட்டுள்ள அமெரிக்க நீதிதிணைக்களம் இவர் டிரம்பினை கொலை செய்வதற்கான திட்டத்தினை வழங்கினார் என குறிப்பிட்டுள்ளது.

பர்ஹாட் சகேரி இன்னமும் கைதுசெய்யப்படவில்லை என தெரிவித்துள்ள அமெரிக்கா அவர் ஈரானில் வசிக்கின்றார் என தெரிவித்துள்ளது. ஈரான் இந்த குற்றச்சாட்டினை நிராகரித்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *