பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் எழுவர் சுட்டுக்கொலை; எல்லை பகுதியில் இராணுவ வீரர்கள் தீவிர கண்காணிப்பு

பாகிஸ்தானின் வஜிரிஸ்தான் பகுதியில் சந்தேகத்திற்கிடமான பயங்கரவாதிகள் இராணுவ வீரர்கள் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் எழுவர் உயிரிழந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் இருந்து பலுசிஸ்தான் மாகாணம் வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவ முயற்சிப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதன்பின்னர் இராணுவ வீரர்கள் அந்த பகுதிக்கு விரைந்தனர்.

பாகிஸ்தானில் அண்மை காலமாக பயங்கரவாத தாக்குதல் அதிகரித்து வருவதை காணமுடிகிறது.

குறிப்பாக தலீபான்கள் ஆட்சியைக் கைப்பற்றிய பின்னர் ஆப்கானிஸ்தானில் இருந்து பாகிஸ்தானுக்குள் பயங்கரவாதிகள் அதிகளவில் ஊடுருவுகின்றனர். இதனை கட்டுப்படுத்த எல்லை பகுதியில் இராணுவ வீரர்கள் தீவிர கண்காணிப்பில ஈடுபட்டு வருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *