கவிதைகள்

அப்பன் முருகன் அருட்டமிழ் ஆகும்!…. (5ம் நாள்)…. கவிதை… ஜெயராமசர்மா

மொழியும் ஒளியும் முருகன் என்பார்
முத்தமிழ் உயிராய் முருகனே உள்ளான்
முருகன் பெயரே இனிமைத் தமிழே
தமிழே முருகன் தலை பணிவோமே

அன்னைத் தமிழில் அமுதாய் இருக்கும்
அருமைத் தமிழே திருப்புகள் ஆகும்
அருண கிரியின் அத்தனை தமிழும்
அப்பன் முருகன் அருட்டமிழ் ஆகும்

திருப்புகள் தமிழைச் சிந்தை இருத்தினால்
செந்தமிழ் அனைத்தும் வந்துமே குவியும்
பாடிடும் வேளை பக்தியும் பெருகும்
பரமனின் மைந்தன் சித்தியும் கிடைக்கும்

 

 

 

 

 

 

 

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண், அவுஸ்திரேலியா

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *