விஜய் தொடங்கப்போகும் புதிய டிவி சேனல்; பெயர் என்ன தெரியுமா?

தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கிய விஜய் 2026ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுகிறார்.

இந்நிலையில், தற்போது கட்சியின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியில் நடைபெற்றது.

சுமார் 8 லட்சம் பேர் கலந்துகொண்ட இம்மாநாட்டிற்கு 80 கோடி ரூபாய்வரை விஜய் செலவழித்ததாக தகவல் சொல்லப்படுகிறது.

இம்மாநாட்டில் திராவிட மாடல் என்று கூறிக்கொண்டு ஏமாற்றுகிறீர்கள் என்று தமிழ்நாட்டை ஆளும் கட்சியான திமுகவை நேரடியாக பேசியது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மேலும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் சில கருத்துக்களை முன்வைத்து விஜய்யை விமர்சனம் செய்தார்.

இதனைதொடர்ந்து, நேற்று தவெக நிர்வாகிகளிடம் விஜய் தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தவெக ஆலோசனை செயற்குழு கூட்டத்தின் போது 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில், அவர் புதிதாக சேனல் ஒன்றை தொடங்கப்போவதாகவும், அதற்கு தமிழ் ஒளி என்று பெயர் வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

நாள் முழுக்க வாரம் முழுக்க ஒளிபரப்பாகும் செய்தி சேனலாக தமிழ் ஒளி இருக்கும் என்றும், அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *