கவிதைகள்

வேலவன் திருவருள் விரைந்துமே கிடைக்கும்!… (3 ம் நாள் )… கவிதை… ஜெயராமசர்மா

( 3 ம் நாள் )

கந்தன் என்றால் கவலைகள் அகலும்
காரியம் சிறக்கும் களிப்பும் பெருகும்
வெந்திடு உள்ளம் விடிவினைக் காணும்
கந்தன் கருணை களையும் அனைத்தையும்

கந்தனின் கைகளில் அமர்ந்திடும் வேலோ
கயமையை நோக்கியே குறியாய் இருக்கும்
வேதனை போக்கும் வெற்றியைக் கொடுக்கும்
வேலவன் வெற்றி வேலதே ஆகும்

வேலை வழிபடு வேதனை போகும்
வேலை நினைந்தால் வெற்றியே கிடைக்கும்
வேலை மனமதில் இருத்தியே வைத்திடு
வேலவன் திருவருள் விரைந்துமே கிடைக்கும்

 

 

 

 

 

 

 

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண், அவுஸ்திரேலியா

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *