இந்தியா

1 மணி நேரத்திற்கு 10 பேர்; இந்தியர்கள் குறித்து அதிர்ச்சித் தகவல்!

கடந்த ஓராண்டில் ஒரு மணி நேரத்திற்கு 10 பேர் என்ற கணக்கில், 90,000 இந்தியர்கள் அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக நுழைந்து பிடிபட்டுள்ளதாக,அந்நாட்டு எல்லை பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ள புள்ளி விபரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையின் படி கனடா மற்றும் மெக்சிகோ எல்லை வழியே 29 லட்சம் பேர் சட்ட விரோதமாக நுழைந்து பிடிபட்டுள்ளனர் எனவும் அவர்களில் 90,415 பேர் இந்தியர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பிடிக்கப்பட்ட இந்தியர்களில் 50% பேர் குஜராத்தை சேர்ந்தவர்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *