தேர்தல் களம்

தமிழ் மக்களின் உரிமையை வென்றெடுக்க முடியும்!

ஜனநாய தமிழ்த்தேசியக் கூட்டணி தேர்தலில் பலமானதொரு கட்சியாக மக்கள் ஆணை கிடைத்தால் தமிழ் மக்களின் அடிப்படை உரிமையை வென்றெடுக்க முடியும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் த. சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி, பரந்தன் பகுதியில் ஜனநாய தமிழ்த் தேசியக் கூட்டணி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் பா. கஜதீபன் ஆகியோர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இதன் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் தேசிய பரப்பில் பலமான கட்சியாக மக்கள் எமக்கு ஆதரவு தருகின்ற வேளை முன்புபோல் இல்லாது தமிழ் மக்களின் ஒற்றுமையாக செயற்பட்டு தமிழ் மக்களின் பிரச்சனையை தீர்ப்போம். தற்போதைய அரசாங்கம் தமிழ்த் தேசிய இனப்பிரச்சனைக்கு எவ்வாறு செயற்படும் என்பது தெரியாது.

ஜனாதிபதியுடன் பேசி நியாயமான தீர்வைப் பெறுவதற்கான முயற்சிகளை முன்னெடுப்போம் என தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *