அமெரிக்காவில் பாடசாலை நிகழ்வில் துப்பாக்கி பிரயோகம்: மூவர் பலி

அமெரிக்காவில் இரு குழுக்களிடையேயான மோதலைத் தொடர்ந்து திடீரென மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவின் மிசிசிபி மாகாணம் ஹொல்மெஸ் நகரில் பாடசாலைகளுக்கு இடையேயான கால்பந்து போட்டியில் அப்பகுதியை சேர்ந்த பாடசாலை, சாம்பியன் பட்டம் வென்றது.

வெற்றிக் கொண்டாட்டத்திற்கான நிகழ்ச்சிகள் இடம்பெற்ற போது இரு குழுக்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

இதன்போது திடீரென மேற்கொள்ளபட்ட துப்பாக்கி பிரயோகத்தில் மூவர் உயிரிழந்ததுடன் மேலும் 08 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

துப்பாக்கி பிரயோகம் தொடர்பில் அமெரிக்க பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *