தேர்தல் களம்

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி நேற்று யாழ் மாவட்டத்தில் வேட்பு மனுத் தாக்கல்

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்திற்குரிய வேட்புமனுக்களை நேற்றையதினம் கையளித்தனர்.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் நேற்றுக் காலை வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது.

ஜனநாயகத் தமிழ் தேசிய கூட்டணி, இம்முறை சங்குச் சின்னத்தில் வடக்கு, கிழக்கில் களமிறங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த தேர்தலில் கூட்டணி சார்பில் வேட்பாளர்களாக தர்மலிங்கம் சித்தார்த்தன், ஆறுமுகம் கந்தையா பிரேமச்சந்திரன், குருசுவாமி சுரேந்திரன், கனகலிங்கம் சிவாஜிலிங்கம், பாலச்சந்திரன் கஜதீபன், சிங்கபாகு சிவகுமார், சசிகலா ரவிராஜ், சிவநாதன் ரவீந்திரா, ஜெயரத்தினம் ஜெனார்த்தனன் ஆகியோர் போட்டியிடவுள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *