இந்தியா

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு: கட்சித் தலைவர் விஜய் வெளியிடவுள்ள முக்கிய அறிவிப்பு

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு குறித்து நாளை அறிவிக்கப்படவுள்ளது.

இன்று முற்பகல் 11.17 மணிக்கு முதல் மாநாடு இடம்பெறும் திகதி தொடர்பில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் அறிவிப்பார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை நடிகர் விஜய் ஆரம்பித்திருந்த நிலையில், கடந்த ஓகஸ்ட் மாதம் 22ஆம் திகதி கட்சிக் கொடியையும், கொடிப் பாடலையும் அறிமுகம் செய்து வைத்தார்.

அப்போது கட்சியின் முதல் மாநாடு விரைவில் நடத்தப்படும் என்றும் அதற்கான விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு குறித்து நாளை அறிவிக்கப்படவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *