இந்தியா

ஷீரடி சாய்பாபா கோவிலில் நடிகர் விஜய்; சூப்பர் ஸ்டார் பாணியில் திடீரென ஆன்மிக பயணம்

நடிகர் விஜய் சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம், மகாராஸ்ட்ராவில் உள்ள அகமது நகரில் அமைந்துள்ள சீரடி சாய்பாபா கோவிலுக்குச் சென்றுள்ளார்.

தி கோட் படத்தின் ரிலீஸ் தனது கட்சியின் முதல் மாநில மாநாடு நடைபெறுவதால் சிறப்பு வழிபாடு நடத்த சாய் பாபா கோவிலுக்குச் சென்றுள்ளார்.

ஏற்கனவே சென்னையில் தனது தாயாரின் வேண்டுகோளுக்கு இணங்க, சாய் பாபா கோவில் கட்டிக்கொடுத்திருந்தார்.

மேலும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சாய்பாபா பக்தர் என்பதால் சூப்பர் ஸ்டாரை தளபதி பின்பற்றுகின்றார் என்ற பேச்சும் எழுந்துள்ளது.

இந்நிலையில் இது குறித்த காணொளிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Oruvan

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *