இந்தியா

இஸ்லாமாபாத்தில் பிராந்திய மாநாடு: பிரதமர் மோடிக்கு பாகிஸ்தான் அழைப்பு

ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பின் மாநாட்டிற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு பாகிஸ்தான் அழைப்பு விடுத்துள்ளது.

பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பின் மாநாடு இடம்பெறவுள்ளது.

இந்நிலையில் பிரதமர் மோடிக்கு உத்தியோகப்பூர்வ அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

மாநாட்டில் கலந்து கொள்வதற்காக உறுப்பு நாட்டு தலைவர்களுக்கு அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் நாட்டின் வெளியுறவு துறை

அலுவலகத்தின் செய்தி தொடர்பாளர் மும்தாஸ் சாரா பாலோக் தெரிவித்துள்ளார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதை சில நாடுகள் ஏற்கனவே உறுதிப்படுத்திவிட்டதாகவும் தெரிவித்த அவர்,எந்தெந்த நாடுகள் கலந்து கொள்கின்றன என்பது பற்றிய தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *