இந்தியா

இந்தியாவின் அடுத்தடுத்து வாகனங்கள் மோதி பயங்கர விபத்து; 5 பேர் உயிரிழப்பு

இந்தியாவின் கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த பேரண்டப்பள்ளி தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து 13 வாகனங்கள் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தின்போது, 8 கார்கள், 4 லாரிகள், ஒரு பேருந்து மோதிக்கொண்டுள்ளன. இந்த விபத்தில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். 10 இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.விபத்து காரணமாக தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள பொலிஸார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *