இந்தியா

தமிழக மீனவர்கள் கைது; நடவடிக்கை எடுக்குமாறு கோரி மு.க. ஸ்டாலின் கடிதம்

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த 11 மீனவர்களும் மீன்பிடி விசைப்படகும் நேற்று இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ள சம்பவம் மிகுந்த கவலையளிப்பதாக அவர் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அவர் எழுதியுள்ள கடிதத்தில்,

“இவ்வாறான நிகழ்வுகள் இடம்பெறுவதை நான்இதற்று முன்னரும் பல தடவைகள் சுட்டிக்காட்டியுள்ளேன். இந்த வருடத்தில் மாத்திரம் 324 மீனவர்களும், 44 படகுகளும் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ளன.

இந்த கைது நடவடிக்கைகளால் தமிழ்நாடு மீனவ சமூகத்தினர் பெரும் இன்னல்களைச் சந்தித்து வருவதுடன் அவர்களது வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு வாரங்களில், அடையாளந் தெரியாத நபர்கள் கடலில் இந்திய மீனவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இந்தப் பிரச்சினைகளுக்கு உடனடியாகத் தீர்வு காண வேண்டியது அவசியம்.

எனவே, கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிப்பதற்கு உறுதியான தூதரக நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்” என தமிழக முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *