இந்தியா

கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை; குற்றம் சுமத்தப்பட்ட சஞ்சய் ராய் பற்றி வெளிவந்த தகவல்

கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான சஞ்சய் ராயிடம் பல கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகின்றன.

கொல்கத்தா உயர் நீதிமன்ற உத்தரவையடுத்து இவ் வழக்கை இந்திய மத்திய புலனாய்வு பிரிவு விசாரித்து வருகிறது.

விசாரணை அறிக்கையை இன்று இந்திய மத்திய புலனாய்வு பிரிவு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சஞ்சய் ராயிடம் இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் அவர் பாலியல் வக்கிர எண்ணமுடையவர் எனவும் தனது தவறுதலுக்காக ஒருபோதும் வருந்தவில்லை எனவும் விசாரணைகளில் அதிகாரிகள் கேட்கும் கேள்விகளுக்கு எந்த குற்றவுணர்ச்சியும் இல்லாமல் பதில் கூறியதாகவும் தகவலறிந்த வட்டாரங்களால் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறிருக்க இக் கொலை தொடர்பில் இன்றும் 14ஆவது நாளாக போராட்டம் நீடிக்கிறது. உயிரிழந்த பெண் மருத்துவருக்கு நீதி கிடைக்கும் வரையில் போராட்டம் தொடரும் என மருத்துவர்கள் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *