கைது செய்யப்பட்ட எம்.பி அலி சப்ரி ரஹீம் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்!

கைது செய்யப்பட்ட புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அலி சப்ரி ரஹீம் இன்று காலை கைது செய்யப்பட்டு புத்தளம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார். இதன்போது, அவரை ரூ. 2 இலட்சம் சரீரப் பிணையில் விடுவித்ததோடு, 22 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு புத்தளம் நீதவான் நீதிமன்றின் பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

வழக்கு ஒன்றுக்கு ஆஜராகாத நிலையில் இருந்த குறித்த பாராளுமன்ற உறுப்பினரை உடனடியாக கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு புத்தளம் மேலதிக மாவட்ட நீதிபதியும், மாவட்ட நீதவானுமான அயோனா விமலரத்ன கற்பிட்டி சுற்றுலா நீதவான் நீதிமன்றில் வைத்து திறந்த பிடியாணை ஒன்றை கடந்த 8 ஆம் திகதி பிறப்பித்திருந்தார்.

இந்நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் இன்றையதினம் கற்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு சென்றிருந்த போது, அவர் கைது செய்யப்பட்டார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *