முச்சந்தி
ஐஸ்லாந்தில் புதிய பெண் அதிபர் ! உலகில் பெண் ஆளுமைகளின் ஆட்சிகள்!! …. ஐங்கரன் விக்கினேஸ்வரா.

உலகிலேயே இதுவரை அதிக பெண் தலைவர்களை கொண்ட நாடு என்றால் அது ஐஸ்லாந்து, ஸ்விட்சர்லாந்து மற்றும் பின்லாந்து ஆகும்.
ஐஸ்லாந்து நாட்டின் புதிய பெண் அதிபராக தொழில் அதிபரான ஹல்லா தோமஸ் டோட்டிர் (Halla Tomasdottir) கடந்த மாதம் தெரிவு செய்யப்பட்டு உள்ளார்.
கடந்த ஜூன் மாதம் நடந்த

தேர்தலில் அளிக்கப்பட்ட வாக்குகளில் 34% பெற்ற முன்னாள் பிரதமர் கேத்ரின் ஜாகோப்ஸ்டோட்டிர் (Katrin Jakobsdottir) இத்தேர்தலில் தோற்றார்.
உலகில் ஆட்சி பொறுப்பில் பெண்கள்:
உலகில் உள்ள 195 நாடுகளில் 125 நாடுகளில் இதுவரை ஒரு பெண் தலைவர் ஆட்சி பொறுப்பு வகித்ததில்லை என சர்வதேச வெளியுறவு மன்றத்தின் (Council on Foreign Relations) புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
சர்வதேச ரீதியில் 68 நாடுகளில் ஒரு பெண் தலைவராவது இதுவரை ஆட்சி பொறுப்பில் இருந்துள்ளனர் எனவும், மறுபுறம், 193 நாடுகளில் 27 நாடுகளில் மட்டுமே தற்போது பெண்கள் அரசாங்கத்தின் தலைவர்களாக பதவியில் இருப்பதாகவும் அந்த புள்ளி விவரம் சொல்கிறது.
ஐஸ்லாந்தில் பெண் அதிபர்:

ஐஸ்லாந்து நாட்டில் ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் பெண் தொழில் அதிபரான ஹல்லா டோமஸ் டோட்டிர் மற்றும் முன்னாள் பிரதமர் கேத்ரின் ஜாகோப்ஸ்டோட்டிர் போட்டியிட்டனர்.
55 வயதான டோமஸ் டோட்டிர் 34.3 சதவீத வாக்குகளும்,48 வயதான ஜாகோப்ஸ்டோட்டிர் 25.5 சதவீத வாக்குகளும் பெற்றனர்.
இதனையடுத்து ஹல்லா தோமஸ் டோட்டிர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். ஐஸ்லாந்து நாட்டின் இரண்டாவது பெண் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
முன்னதாக கடந்த 1980 ம் ஆண்டில் விக்டிஸ் பின்னபோகாடோட்டிர் முதல் பெண் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்தியாவில் இந்திரா காந்தி:

அதிக பெண் தலைவர்களை கொண்ட நாடு என்றால் அது ஸ்விட்சர்லாந்து, ஐஸ்லாந்து மற்றும் பின்லாந்து ஆக இருப்பினும் இந்தியாவிலும் பல பெண் ஆளுமைகள் ஆட்சியில் இருந்தனர்.
குறிப்பாக இந்திரா காந்தி நீண்டகாலமாக பிரதமராக பதவி வகித்தார். இந்தியாவை பொறுத்தவரை, 1966 ஜனவரி 24 முதல் 1977 ஏப்ரல் 24 வரை இந்திரா காந்தி பிரதமராக பதவி வகித்தார். அதன் பின் மீண்டும் 1980 ஜனவரி 15 முதல் 1984 அக்டோபர் 31 வரை, மரணமடையும் வரை பதவி வகித்து மறைந்தார்.
இந்திரா காந்திக்கு மற்றுமொரு சிறப்பு என்னவென்றால், தனது தந்தையும், நாட்டின் முதல் பிரதமருமான ஜவஹர்லால் நேருவுக்குப் பின் இந்தியாவின் அதிக காலம் பிரதமர் பதவியில் இருந்த ஒரே தலைவர் அதுவும் பெண் தலைவர் என்பது அவருக்கு கூடுதல் சிறப்பாகும்.
இலங்கையில் சிறிமாவோ:

சிறிமாவோ பண்டாரநாயக்கா உலகின் முதல் பெண் பிரதமராகவும்,
இலங்கையின் பிரதம மந்திரியாக மூன்று முறை, 1960-1965, 1970-1977 மற்றும் 1994-2000 ஆகிய காலப்பகுதிகளில் பதவியில் இருந்தவர்.
உலகிலேயே முதலாவது பெண் பிரதமராகவும், இலங்கை சுதந்திரக் கட்சியின் தலைவராகவும் இருந்தவர். இவரது மகள் சந்திரிக்கா பண்டாரநாயக்கா இலங்கையின் நான்காவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட சனாதிபதியாக இருந்தவர்.
இவரது கணவர் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா கொல்லப்பட்ட பின்னர் கட்சியின் தலைமைப் பொறுப்பில் நியமிக்கப்பட்டார். ஜூலை 21, 1960 இல் முதன் முறையாக பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1965 இல் நடந்த பொதுத்தேர்தலில் கட்சி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து 1970 வரை எதிர்க்கட்சித் தலைவராக இருந்து கட்சியை வழி நடாத்தினார். 1970 பொதுத்தேர்தலில் இடதுசாரிகளுடன் கூட்டுச் சேர்ந்து பெரும் வெற்றி பெற்று இரண்டாம் முறை மீண்டும் பிரதமரானார்.
1977 இல் நடந்த தேர்தலில் கட்சி படு தோல்வி அடைந்தது. 1980 இல் அன்றைய ஜே. ஆர். ஜெயவர்த்தனாவின் ஆட்சியினால் ஊழல் குற்றச்சாட்டுகளில் பாராளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு குடியுரிமை பறிக்கப்பட்டு ஏழு வருடங்களுக்கு அரச பதவிகளை ஏற்கத் தடை செய்யப்பட்டார்.
இந்திய குடியரசு தலைமையில் பெண்கள்:
பாரத நாட்டின் முதல் பெண் குடியரசுத் தலைவராக பிரதீபா பாட்டில் 2007 ஜூலை 25 முதல் 2012 ஜூலை 25 வரை பதவி வகித்தார். அவருக்குப் பின், இந்தியாவின் இரண்டாவது பெண் குடியரசுத் தலைவராக கடந்தாண்டு 2023 ஜூலை 25ஆம் தேதி திரௌபதி முர்மு பதவியேற்றார். இவர் இந்தியாவின் 15ஆவது குடியரசு தலைவர் ஆவார்.

இந்தியாவில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வசந்தரா ராஜி, மாயாவதி, உமா பாரதி, சுஷ்மா ஸ்வராஜ், ஷீலா தீக்ஷித் என 15க்கும் மேற்பட்ட பெண்கள் மாநிலத்தின் முதல்வராக பதவி வகித்துள்ளனர்.
மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி பெண் முதல்வராக இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
குளிர் படர்ந்த தேசத்தில் பெண் ஆளுமை:

ஐஸ்லாந்து தேசத்தில் எப்போதும் குளிர் படர்ந்தே இருக்கும். அங்கே
புதிய அதிபராக தொழிலதிபரான ஹல்லா டோமஸ்டோட்டிரை தெரிவு செய்யப்பட்டுள்ளமை பெண் ஆளுமையின் உயர்ச்சியை வெளிக்காட்டி உள்ளது.
முன்னாள் பிரதமர் கேத்ரின் ஜேகோப்ஸ்டோட்டிரை தோற்கடித்தார், அவர் ஏப்ரல் மாதம் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட பிரதமர் பதவியில் இருந்து விலகினார். RUV படி, அவர் 25% வாக்குகளைப் பெற்றார்.
நான்கு வருட காலத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி, மட்டுப்படுத்தப்பட்ட அரசியல் அதிகாரங்களைக் கொண்டிருக்கிறார்.
1944 இல் குடியரசு நிறுவப்பட்டதிலிருந்து ஐஸ்லாந்தின் ஏழாவது ஜனாதிபதியாக இருக்கும் டோமாஸ்டோட்டிர், எட்டு ஆண்டுகளுக்கு முன்பு ஜோஹன்னசனுக்குப் பின்னால் இரண்டாவது இடத்தில் வந்தபோது ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட்டார்.
ஆகஸ்ட் 1ம் திகதி அவர் தலைமை பதவியை ஏற்கவுள்ளார்.
![]()