கவிதைகள்

“அதே தயக்கத்துடன் காதலைச் சொல்லாமலேயே”…. கவிதை …. முல்லைஅமுதன்.

தயக்கம் தான் அவளிடம்
நானும்,
என்னிடம் அவளும்
காதலை சொல்லிக்கொள்ளமுடியாமல்
போயிற்று.
தய்க்கம் தான்
அம்மாவிடம் அவளோ,
அப்பாவிடம் நானோ
சொல்லாமலேயே
நெடுங்காலமாய்
இருந்துவிட்டோம்.
சொல்லியிருக்கலாம் தான்.
அந்த இருவர் மீதான பாசம் கலந்த பக்தியும்
காரணமாய் இருந்திருக்கலாம்.
தங்கை விரும்பியவனை
அப்பா கொன்றதற்காகவும்,
அம்மாவின் திமிருக்காகவும்
தயக்கத்திற்கான
காரணமாயும் கொல்லிக்கொள்ளலாம்.
தோழிகளின் தைரியத்திற்கு
முன்னால்
இன்றும்
தாழ்பணிந்து நிற்கின்றோம்
அதே தயக்கத்துடன்
காதலைச் சொல்லாமலேயே…
முல்லைஅமுதன்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *