முச்சந்தி
அமைதிக்கான நோபல் பரிசு வென்ற விஞ்ஞானி: மெக்சிகோ 200 ஆண்டு வரலாற்றில் முதல் பெண் அதிபர்! …. ஐங்கரன் விக்கினேஸ்வரா.

உலகின் பல நாடுகளில் பெண் அரசியல்வாதிகள் தலைமைப் பொறுப்பில் அதிபர்களாகவும், பிரதமர்களாகவும் தற்போது உள்ளனர். இவ்வகையில் தற்போது மெக்சிகோவின் முதல் பெண் அதிபராக கிளாடியா ஷீன்பாம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இலத்தீன் அமெரிக்காவில் பெண் அதிபர்கள்:
மெக்சிகோவின் முதல் பெண் அதிபராக தெரிவு செய்யப்பட்டுள்ளமை போன்று, இலத்தீன் அமெரிக்க நாடுகளில் பல பெண் ஆளுமைகள் ஆட்சியில் உள்ளனர். அத்துடன்
இலத்தீன் அமெரிக்காவில் உள்ள 12க்கும் அதிகமான நாடுகளில்
ஜனநாயக தேர்தல் முறை மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்ட இடதுசாரி
அரசாங்கங்கள் தற்போது ஆட்சிப் பொறுப்பில் உள்ளன.
எதற்காக இலத்தீன் அமெரிக்க நாடுகள் இடதுசாரி பாதையில் தொடர்ந்து முன்னேறுகின்றன என்பது அமெரிக்காவிற்கு வியப்பாக
இருப்பினும், மக்களால் தேர்ந்து
எடுக்கப்பட்ட அரசுகள் இவை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இலத்தீன் அமெரிக்காவில் இடதுசாரி அரசு எழுச்சி:
இலத்தீன் அமெரிக்க நாடுகளில்
இடதுசாரி அரசுகளின் எழுச்சியாக 2018 இல் மெக்ஸிக்கோவும், பின்னர் 2019 இல் அர்ஜென்டீனாவும்
எழுந்தன. மேலும் 2020 இல் பொலிவியாவில் இடதுசாரி அரசு
நிறுவப்பட்டது.
அதன்பின் 2021 இல் பெரு,
ஹொண்டுராஸ் சிலி, பின்னர் கொலம்பியாவை தொடர்ந்து 2022 இல் பிரேஸிலில் இடதுசாரி அரசை அந்நாட்டு மக்கள் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுத்துள்ளனர். குவாத்தமாலா ஜனாதிபதித் தேர்தலில் பெர்னார்டோ அரேவலோ மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளார்.
அமைதிக்கான நோபல் பரிசு வென்றவர்:
சர்வதேச ரீதியில் மகளிர் சக்தி பல துறைகளில் பரவி வருகின்ற நிலையில் அரசியல் களத்திலும் அவர்களுடைய சாதனைகளையும் அவர்கள் சமூகத்தின் மீது ஏற்படுத்துகின்ற தாக்கத்தையும் உணர முடிகிறது.
அமைதிக்கான நோபல் பரிசு வென்ற விஞ்ஞானியாகவும், அரசு ஊழியராகவும், நீண்டகால சமூக செயற்பாட்டாளராகவும் செயல்பட்ட ‘கிளாடியா ஷீன்பாம்’ மெக்சிகோவின் 200 ஆண்டு கால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் ஜனாதிபதியாவார்.
கடந்த ஜூன் 3 – ஜூன் 2ம் தேதி நடைபெற்ற மெக்சிகோ ஜனாதிபதி தேர்தல் முடிவில் டாக்டர். கிளாடியா ஷீன்பாம் ஜனாதிபதியாக வெற்றி பெற்றுள்ளார்.
மெக்சுகோவின் தேசிய மறுமலர்ச்சிக்கான இயக்கம், மெக்சிகோ பசுமை சூழலியல் கட்சி மற்றும் தொழிலாளர் கட்சி ஆகியவற்றுடன் கூட்டணி அமைத்து செயல்பட்டு வந்த இவர் 58 சதவீத வாக்குகள் பெற்று வென்றுள்ளார்.
200 ஆண்டில் முதல் பெண் அதிபர்:

மெக்சிகோ நாட்டின் 200 ஆண்டுகளில் முதல் முறையாக பெண் அதிபராக கிளாடியா ஷீன்பாம் வரலாற்று சிறப்புமிக்க தேர்தலில் வெற்றிபெற்று தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.
கடந்த வாரம் ஜூன் 2,3ம் திகதிகளில் நடைபெற்ற தேர்தலில் மெக்சிகோ நகரின் 61 வயதான முன்னாள் மேயர் 58% முதல் 60% வரை வாக்குகளைப் பெற்றதாக ஆரம்ப முடிவுகள் காட்டுவதாக மெக்சிகோவின் அதிகாரப்பூர்வ தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
இது அவரது முக்கிய போட்டியாளரான தொழிலதிபரான ஹோட்சில் கல்வேஷ் (Xóchitl Gálvez) ஐ விட சுமார் 30 சதவீதத்தால் முன்னிலையில் பெற்றார்.
அவர் எதிர் வரும் அக்டோபர் 1 ஆம் திகதி தனது வழிகாட்டியான தற்போதைய அதிபரான ஆண்ட்ரேஸ் மானுவல் லோபஸ் ஒப்ராடரை வெளியேறும் போது அந்த இடத்தைப் பொறுப்பேற்பார்.
கிளாடியா ஷீன்பாம் அடிப்படையில் இவர் ஒரு யூதர். இவரது தாய்வழி தாத்தாவும் பாட்டியும் பல்கேரியாவிலிருந்து நாஜிகளிடமிருந்து தப்பி மெக்சிகோவிற்கு குடிபெயர்ந்தவர்கள்.
அவரது தந்தை வழி அப்பப்பாவும், அப்பம்மாவும் லிதுவேனியாவைச் சேர்ந்தவர்கள்.
முதல் பெண் அதிபர் ஓர் விஞ்ஞானி:
அரசியலில் ஈடுபடுவதற்கு முன்பு ஒரு விஞ்ஞானியாக ஒரு சிறந்த வாழ்க்கையை கொண்டிருந்தார்.
அவரது பெற்றோர் இருவரும் விஞ்ஞானிகள் ஆவார்கள். அத்துடன் திருமதி ஷீன்பாம் ஆற்றல் பொறியியலில் முனைவர் பட்டம் பெறுவதற்கு முன்பு இயற்பியல் படித்தார்.
தற்போது அவர் மேற்கு நாடுகளின் உறவுகளை வளர்ப்பேன் என்று உறுதியளித்துள்ளார். இந்த வெற்றி தனக்கு மட்டுமின்றி அனைத்து பெண்களுக்குமான சாதனை என்றார் கிளாடியா ஷீன்பாம்.
கிளாடியா ஷீன்பாம் வெற்றியை ஒப்புக்கொண்ட தனது போட்டியாளரான ஹோட்சில் கல்வேஷ்க்கும் நன்றி தெரிவித்தார்.
ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுவதற்கு முன்னர் ஷீன்பாம் மெக்சிகோ நகரத்தின் மேயராக இருந்தார். இது நாட்டின் மிகவும் செல்வாக்கு மிக்க அரசியல் பதவிகளில் ஒன்றாகும் மற்றும் ஜனாதிபதி பதவிக்கு வழி வகுத்ததாகக் கருதப்படுகிறது.
அவர் கலிபோர்னியாவில் உள்ள ஒரு புகழ்பெற்ற ஆராய்ச்சி ஆய்வகத்தில் மெக்சிகன் ஆற்றல் நுகர்வு முறைகளைப் படித்து, காலநிலை மாற்றத்தில் நிபுணரானார்.
அந்த அனுபவமும் அவரது மாணவர் செயல்பாடும் இறுதியில் ஆண்ட்ரேஸ் மானுவல் லோபஸ் ஒப்ராடோர் தலைநகரின் மேயராக இருந்த நேரத்தில் மெக்சிகோ நகரத்திற்கான சுற்றுச்சூழலுக்கான செயலாளராக பதவியைப் பெற்றார்.
2018 ஆம் ஆண்டில் அவர் மெக்சிகோ நகரத்தின் முதல் பெண் மேயரானார் 2023 ஆம் ஆண்டு வரை அவர் பதவி வகித்தார். அவர் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட மேயர் பதவிலிருந்து விலகினார்.
மெக்சிகோ தேர்தலில் இரண்டு முன்னணிப் போட்டியாளர்கள் பெண்கள் என்பது பரவலாகக் கொண்டாடப்பட்டாலும், பிரச்சாரம் வன்முறைத் தாக்குதல்களால் சிதைக்கப்பட்டது.
ஒரு புதிய ஜனாதிபதியுடன், வாக்காளர்கள் மெக்சிகோவின் காங்கிரஸின் அனைத்து உறுப்பினர்களையும் எட்டு மாநிலங்களில் ஆளுநர்களையும், மெக்சிகோ நகர அரசாங்கத்தின் தலைவர் மற்றும் ஆயிரக்கணக்கான உள்ளூர் அதிகாரிகளையும் தேர்ந்தெடுத்தனர்.
குறிப்பாக உள்ளூர் வேட்பாளர்கள் வாக்கெடுப்புக்கு முன்னதாக குறிவைக்கப்பட்டனர்.்மெக்சிகோ தேர்தல் காலத்தில் நாடு முழுவதும் 20 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக அரசாங்கம் கூறுகிறது. மற்ற ஆய்வுகள் மொத்தம் 37 பேர் என்று கூறுகின்றன.
வன்முறைகளை எவ்வாறு சமாளிப்பார் ?
மெக்சிகோவின் வன்முறைக் கும்பல்களை எவ்வாறு சமாளிப்பது என்பது திருமதி ஷீன்பாம் பதவியேற்கும் போது எதிர்கொள்ளும் பல சவால்களில் ஒன்றாக இருக்கும்.
வன்முறையின் வேர்கள் என்று அவர் கூறுவதைச் சமாளிப்பது முக்கியம் என்றும், ஏழை இளம் மெக்சிகன்கள் குற்றக் குழுக்களால் ஆட்சேர்ப்பு செய்யப்படுவதைத் தடுக்க நலத் திட்டங்களில் முதலீடு செய்வதாகவும் உறுதியளித்துள்ளார்.
மெக்சிகோவின் வடக்கே, அயல் நாடான அமெரிக்காவுடனான நட்பு, பரஸ்பர மரியாதை மற்றும் சமத்துவம் ஆகியவற்றின் உறவு இருப்பதை உறுதி செய்வதாக அவர் கூறினார்.
ஆனால் அமெரிக்காவில் வசிக்கும் மற்றும் பணிபுரியும் பல மெக்சிகன்களைப் பற்றிய குறிப்பில், எல்லையின் மறுபக்கத்தில் இருக்கும் மெக்சிகன்களை எப்போதும் பாதுகாப்பதாக உறுதியளித்தார்.
2018 முதல் ஆட்சியில் இருக்கும் லோபஸ் ஒப்ராடரின் கீழ் அமெரிக்காவிற்கும் மெக்சுகோவிற்கும் இடையிலான உறவுகள் பாதிக்கப்பட்டன.
மெக்சிகோவின் அரசியலமைப்பின் கீழ் வெளிப்படையாகப் பேசும் தற்போதைய அதிபர் இரண்டாவது முறையாக போட்டியிட தடை விதிக்கப்பட்டார் இது ஜனாதிபதிகளை ஒரு ஆறு வருட காலத்திற்கு மட்டுமே கட்டுப்படுத்துகிறது. அவர் தனது ஷீன்பாமின் ஆதரித்தார்.
அவருக்கு வாக்களித்தவர்களில் பலர், வறுமையை ஒழிப்பதற்கான மொரேனாவின் திட்டத்தை ஆதரிப்பதாகவும், அது தொடர விரும்புவதாகவும் கூறினர்.
![]()