ஐ. தே. க. அமைப்பாளராக பேரிம்பராசா மனோ ரஞ்சினி நியமனம்!

அம்பாறை மாவட்ட கல்முனை  தொகுதி  வலய  அமைப்பாளராக  ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினர் பேரிம்பராசா மனோ ரஞ்சினி  நியமிக்கப்பட்டுள்ளார்.
இதன் படி பாண்டிருப்பு 6 ஆம் வட்டாரம் பாண்டிருப்பு  10 ஆம் வட்டாரம்   நீலாவணை  1 ஆம்  வட்டாரம் கல்முனை 11 ஆம் வட்டாரம் ஆகிய 4 வலயத்திற்கான அமைப்பாளராக  ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான ஸ்ரீ கொத்தாவில் வைத்து குறித்த நியமனம் கடந்த ஞாயிற்றுக்கிழமை(2) வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இதன் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் கட்சியின்  பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார குறித்த  நியமனக் கடிதத்தை கட்சி தலைமையகத்தில் வைத்து வழங்கி வைத்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *