இலக்கியச்சோலை

சிட்னியில் ஐங்கரன் விக்கினேஸ்வராவின் மூன்று நூல்கள் வெளியீடு!

வெள்ளி ஜூன் 7ம் நாள் சிட்னியில் ஐங்கரன் விக்கினேஸ்வராவின் மூன்று
நூல்கள் வெளியீடும் இலக்கிய அரங்கும் நடைபெற உள்ளது.
பாலஸ்தீனம் எரியும் தேசம், ஓர்மத்தின் உறைவிடம் இஸ்ரேல், இலங்கை இதழியலில் சிவகுருநாதன் ஆகிய
ஐங்கரன் விக்கினேஸ்வராவின் மூன்று நூல்கள் வெளியீடு சிட்னியில் வெளியிடப்படவுள்ளது.
இந்நிகழ்வின் தலைமையுரையை எழுத்தாளர் திரு. மாத்தளை சோமு ஆற்றுவார். திரு. தனபாலசிங்கம், டாக்டர். ஹாரூன் காசிம், திரு. சுந்தரதாஸ் அவர்களும் நூல்களை அறிமுகப்படுத்தி உரை ஆற்றுவர்.
இந்நூல் வெளியீட்டு நிகழ்வில்
தினகரன் பிரதம ஆசிரியர் திரு. தே. செந்தில்வேலவர் சிறப்புரை நிகழ்த்த உள்ளார். அத்துடன் திரு. திருநந்தகுமார் அவர்களும் சிறப்புரை ஆற்றுவார்.
சிட்னி தமிழ் மன்றம் ஆதரவில் நடைபெறும் நூல் வெளியீட்டின்
ஏற்புரையை திரு. ஐங்கரன் விக்கினேஸ்வரா அவர்கள் நிகழ்த்துவார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *