மோடி வந்த பிறகு தான் எனக்கு கன்னியாகுமரியே தெரியும்! … கிண்டலடித்த நடிகர் பிரகாஷ் ராஜ்!!

பாஜக தோற்பதற்கு உரிய அனைத்து வேலைகளையும் பிரதமர் நரேந்திர மோடி செய்து விட்டார் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் கூறியுள்ளார். கலைஞர் நூற்றாண்டு விழாவை சிறப்பிக்கும் வகையில் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு ஏற்பாட்டில் அமைக்கப்பட்டுள்ள கலைஞரின் வரலாற்று புகைப்பட கண்காட்சியை நடிகர் பிரகாஷ் ராஜ் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

நடிகர் பிரகாஷ் ராஜிடம் பிரதமர் மோடியின் கன்னியாகுமரி பயணம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “நான் பல ஷூட்டிங்கை பார்த்துள்ளேன்.

ஆனால், மோடி நடத்தும் கன்னியாகுமரி ஷூட்டிங்கிற்கு ஆடியன்ஸ் என கேமராமேன், இயக்குநர், ஆடியன்ஸ் என அனைவரையும் கூட்டி போகிறார்கள்” என்று கூறினார்.

அடுத்ததாக, காந்தி திரைப்படம் வந்த பிறகு தான் மகாத்மா காந்தியை உலகம் தெரிந்தது என்று மோடி பேசியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அவர், “மோடி வந்த பிறகு தான் எனக்கு கன்னியாகுமரியே தெரியும். விவேகானந்தரையும் தெரியும்” என்று கிண்டலாக பேசினார்.

மேலும் பேசிய அவர், “பாஜக தோற்பதற்கு உரிய அனைத்து வேலைகளையும் பிரதமர் நரேந்திர மோடி செய்து விட்டார்” என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *