தேர்தலைப் புறக்கணிக்குமாறு கோரி யாழில் துண்டுப்பிரசுரம்!

ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்குமாறு கோரி தமிழத் தேசிய மக்கள் முன்னணியினரால் யாழ் மத்திய பஸ் தரிப்பிட நிலையத்தில் நேற்று மாலை துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

இலங்கையின் ஒற்றையாட்சி அரசியலமைப்பு நீக்கப்பட்டு சமஸ்டி அரசியலமைப்பு உருவாக்குவதற்கான உத்தரவாதம் வழங்கப்படும் வரை ஜனாதிபதி தேர்தலை பகிஷ்கரிப்போம் என்ற தொனி பொருளில் குறித்த துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

குறித்த நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடக பேச்சாளர் கனகரத்தினம் சுகாஸ், முன்னாள் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள், கட்சியின் ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *