முச்சந்தி

“காற்றுவெளி” இங்கிலாந்து சிறப்பிதழ் 2024..!

இங்கிலாந்து சிறப்பிதழ் 2024
வணக்கம்,
பல வருடங்களாக காற்றுவெளி அவ்வப்போது அச்சிதழாகவும்,தொடர்ச்சியாக மின்னிதழாகவும் வெளிவருவது தாங்கள் அறிந்ததே.
கூடவே,
அவ்வப்போது கவிதைச் சிறப்பிதழ்,சிறுகதைச் சிறப்பிதழ்,நம்மவர் கதைகளின் சிறப்பிதழ்,மொழிபெயர்ப்புச் சிறப்பிதழ்,சிற்றிதழ்ச் சிறப்பிதழ்,நினைவுச்சிறப்பிதழ் எனவும் (ஈழத்து எழுத்தாளர்களான செம்பியன் செல்வன்,சொக்கன்,அகஸ்தியர்..தொடர்கிறது.
விரைவில்,
இங்கிலாந்து வாழ் படைப்பாளர்களின் படைப்புகளை மட்டும் தாங்கிய சிறப்பிதழாக வரவுள்ளது.எனவே,இங்கிலாந்து வாழ் படைப்பாளர்கள் பங்குபற்றலாம்.இலக்கிய ஆய்வுகள் இதழின் 4 பக்கங்களுக்கு அதிகமாக இல்லாமலும்,யுனிக்கோட்(லதா)எழுத்துருவிலும் எழுதுதல் வேண்டும்.மின்னஞ்சலில் மாத்திரம் (பி டி எப் இன்றி)அனுப்புங்கள்.படைப்புக்கள் கவிதை,சிறுகதை,இலக்கிய ஆய்வுகள் என அமையலாம்.
உங்கள் நண்பர்களுக்கும் இத் தகவலைப் பரிமாறுங்கள்.
நட்புடன்,
முல்லைஅமுதன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *