மூன்று வயது குழந்தை மின்சாரம் திருடியதாம்!: பாகிஸ்தானில் ‘பச்சை மண்’ மீது விநோத வழக்கு
பாகிஸ்தானில் மின் திருட்டில் ஈடுபட்டதாக 3 வயது குழந்தை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட விநோதம் நிகழ்ந்துள்ளது.
கைபர் பக்துன்க்வா மாகாணத்தில், பெஷாவர் மின்விநியோக நிறுவனம், குடிநீர் மற்றும் மின்சார வளர்ச்சி ஆணைய அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் ஜாயீம் அப்பாஸ் என்ற 3 வயது சிறுவன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனுடன் நிற்காமல், அந்த குழந்தையை நீதிமன்றத்திலும் ஆஜர்படுத்தினர்.
இந்த வழக்கை எடுத்த உடனே தள்ளுபடி செய்த நீதிபதி, குழந்தை மீது வழக்குப்பதிவு செய்ததை அதிகாரிகளுக்கு தெரியாமல் உள்ளதாக வேதனையுடன் குறிப்பிட்டார்.
![]()