ஜூலியன் அசேஞ்ஜ் வழக்கில் அதிரடி உத்தரவு!

விக்கி லீக்ஸின் ஸ்தாபகர் ஜூலியன் அசேஞ்ஜை அமெரிக்காவுக்கு நாடு கடத்துவது தொடர்பான வழக்கை மேல்முறையீடு செய்ய லண்டன் உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

அவுஸ்திரேலியாவை சேர்ந்த ஜூலியன் அசேஞ்ச் கடந்த 2006 ஆம் ஆண்டு தனது ‘விக்கி லீக்ஸ்’ இணையதளத்தின் மூலம் பல்வேறு நாடுகளில் போர் குற்றம் மற்றும் ரகசிய ஆவணங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.

இதில் அமெரிக்க வெளியுறவு தொடர்பான இரண்டரை லட்சத்துக்கும் அதிகமான ரகசிய ஆவணங்களை வெளியிட்ட வழக்கு லண்டன் உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற வருகின்றது

அந்தவகையில் ஜூலியன் அசேஞ்ஜை நாடு கடத்தி கொண்டு வரும் குறித்த  வழக்கில் இரு நீதிபதிகள் கொண்ட பெஞ்ச், பிறப்பித்த உத்தரவை எதிர்த்து லண்டன உயர்நீதிமன்றத்தில் அசேஞ்ச் மேல்முறையீடு செய்தார்.

இந்நிலையில் குறித்த  மனுவை லண்டன் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டதாகத்  தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *