முச்சந்தி

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரய்சி: இஸ்லாமிய புரட்சியின் பின்வந்த மேற்குலகின் கடும் போக்காளர்!… ஐங்கரன் விக்கினேஸ்வரா.

ஈரானின் இஸ்லாமிய புரட்சியானது
1979இல் அமெரிக்க ஆதரவு அரசர் முகமது ரிசா சா பலவீ ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டு, இஸ்லாமிய குடியரசு அயத்தோலா கோமெய்னி தலைமையில் புதிய ஆட்சி எழுந்தது.
45 ஆண்டுகால ஈரானிய இஸ்லாமிய புரட்சியின் பின்னர், அமெரிக்கா, இஸ்ரேலை மிகக் கடுமையாக எதிர்த்த அதிபராக இப்ராஹிம் ரய்சி (President Ebrahim Raisi) விளங்கினார். இவரே ஹெலிகாப்டர் விபத்தில் பலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊகங்களும் ஊடகங்களும்:
ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் பலியான நிலையில் இஸ்ரேல் நாட்டு உளவு அமைப்பான மொசாத் பின்னணியில் என பல ஊகங்கள் ஊடகங்களில் பரவலாகி வருகிறது.
 
டெஹ்ரான் தலைமையுடன் நீண்ட நாள் பகையாளியான இஸ்ரேலின் வேலை என்றும், மொசாத்தான் செய்து இருக்கும் எனவும் பல சந்தேகங்கள் எழுந்துள்ளன. ஈரான் அதிபர் விபத்தில் பலியானது, திட்டமிட்ட சதி எனவும் திடீரென எழுந்த சந்தேகங்களால், சமூக ஊடகங்களில் பலத்த சர்ச்சை எழுந்துள்ளது.
இதனிடையே ஹெலிகாப்டர் விபத்துக்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என இஸ்ரேல் உடனடியாக விளக்கமளித்துள்ளது.
இஸ்ரேல் – ஈரான் முரண்பாடுகளுக்கு இடையே திடீரென ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்கு உள்ளானது. விபத்து நடந்ததாக கூறப்படும் இடத்தை டிரோன் ஒன்று உறுதி செய்த நிலையில் அந்த பகுதியில் செய்யப்பட்ட சோதனையில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்தது உறுதி ஆனது.
ஹெலிகாப்டரில் ஈரானிய அதிபர் இப்ராஹிம் ரைசி, அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமிரப்துல்லாஹியன், ஈரானின் கிழக்கு அஜர்பைஜான் மாகாண ஆளுநர் மற்றும் பிற அதிகாரிகள் மற்றும் பாதுகாவலர்கள் இருந்ததாக அரசு தெரிவித்துள்ளது. இவர்கள் எல்லோரும் விபத்தில் பலியாகி உள்ளனர்.
ஈரானில் 1979 இஸ்லாமிய புரட்சி:
அமைந்ததை இந்நிகழ்வு குறிக்கிறது. ஈரானிய புரட்சிக்கு இடதுசாரி அமைப்புகளும் இசுலாமிய ஈரானிய மாணவர் இயக்கமும் துணைபுரிந்தன. புரட்சியின் தொடக்கத்தில் சா அரசைக் காப்பாற்ற சோவியத் ஒன்றியம் முயன்றாலும் இஸ்லாமிய குடியரசைச் சோவியத் ஒன்றியம் உடனடியாக ஏற்றுக்கொண்டது.
ஈரானிய புரட்சி உலகுக்கு பெரும் வியப்பை அளித்தது. இப்புரட்சிக்கு பொருளாதார நெருக்கடி, அடித்தட்டு மக்களின் புரட்சி, போரில் தோல்வி, கட்டுப்படாத இராணுவம் போன்ற காரணங்கள் இப்புரட்சிக்கு வழிவகுத்தது.
இப்புரட்சி மேற்குலக சார்பு மன்னராட்சியை நீக்கிவிட்டு மேற்குலக எதிர்ப்புக் கொண்ட இசுலாமிய ஆதிக்க கொள்கை உடையதாக மாறியது.
ஈரானிய புரட்சி வேகமாகப் பரவியதற்குத் தேசியவாதம், கலாச்சாரம் மேற்கத்தியமாவதற்கும், மதச்சார்பற்ற முயற்சிகளும் எதிரான பழமைவாத சியா இசுலாமியர்களின் கிளர்ச்சியும், சமூக அநீதிக்கு எதிரான இடது சாரிகளின் போராட்டமும் முக்கிய காரணங்களாகும்.
1973 எண்ணெய் வளத்தில் கிடைத்த பெரும்பணத்தால் நிறைவேற்ற முடியாத பொருளாதார திட்டங்களைத் தீட்டியதும், 1977-78ல் ஏற்பட்ட தற்காலிக கடும் பொருளாதார சிக்கலும் காரணமாகும். அத்துடன் மன்னர் சாவின் ஆட்சி ஊழலும் அடக்குமுறையும் மிகுந்ததாக இருந்தது.
மன்னர் சா முஸ்லிம் அல்லாத மேற்கு நாடுகளின் குறிப்பாக ஐக்கிய அமெரிக்காவின் கையாளாகப் பார்க்கப்பட்டார். அதே சமயத்தில்
சாவுக்கு மேற்குலக அரசியல்வாதிகளிடமும் ஊடகங்களிடமும் செல்வாக்கு பிற்காலத்தில் குறைந்தது.
இஸ்ரேல் – ஈரான் நீண்ட போர் முரண்:
 
இஸ்ரேல் – ஈரான் இடையே நீண்டகாலமாக கடுமையான முரண்பாடுகள் நிலவி வருகிறது. இஸ்ரேலியப் படைகள் கடந்த சில மாதம் முன் சிரியா தலைநகர் டமாஸ்கஸ் மற்றும் சிரியா வடக்கு நகரமான அலெப்போவில் உள்ள விமான நிலையங்கள் மீது நேரத்தில் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது.
அதன்பின் கடந்த ஏப்ரல் 1ம் தேதி சிரியாவில் இருக்கும் ஈரான் தூதரகம் மீது, இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இங்குதான் மோதல் உச்சம் பெற்றது.
இஸ்ரேல் தாக்குதல் நடந்த போது ஈரான் ராணுவ அதிகாரிகளின் கூட்டம் நடந்து கொண்டு இருந்தது.
சர்வதேச விதிமுறைகளின் படி தூதரகங்களை தாக்க கூடாது. இதனால் அங்கே ஈரான் ராணுவ அதிகாரிகளின் கூட்டம் நடந்தது. ஆனால் அதை மீறி இங்கே இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.
ஆனால் சர்வதேச ஐநா விதிகளை மீறி தூதரக வளாகத்தின் மீது வான்வழித் தாக்குதலில் இஸ்ரேல் ஈடுபட்டது. இதில் ஏழு ஈரானிய அதிகாரிகள் கொல்லப்பட்டனர். ஈரானின் உயர்மட்ட ராணுவ அதிகாரிகளில் ஒருவரான பிரிகேடியர் ஜெனரல் முகமது ரெசா ஜாஹேதி கொல்லப்பட்டார். இவர் புரட்சிகர காவல்படையின் (IRGC) மூத்த தளபதி ஆவார்.
ஈரான் பதிலடி தாக்குதல்:
இந்த தாக்குதலுக்கு பின்னர் ஈரான் பாரிய பதிலடி கொடுத்தது. இஸ்ரேலின் உள்ளே ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதற்கு இஸ்ரேலும் பதில் தாக்குதல் நடத்தியது.
தற்போது இஸ்ரேல் ஈரான் இடையே முரண்பாடுகள் போராக மூண்டுள்ளது.
பல வருடங்களாக இரண்டு நாடுகளுக்கு இடையில் புகைச்சல் இருந்து வந்த நிலையில் தற்போது இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்திய பின்னர், பெரும் அபாயம் ஏற்பட்டது.
ஈரானின் மறைமுக யுத்தம்:
சிரியாவில் ஹெஸ்புல்லா படையினருக்கு ஈரான் நீண்டகால ஆதரவு வழங்குகிறது. இவர்கள்தான் பாலஸ்தீனத்தில் ஹமாஸ் படைக்கு உதவி செய்வதாக இஸ்ரேல் கூறுகின்றது.
இவர்களின் ஆதரவின் பெயரிலேயே ஹமாஸ் படைகள் இயங்கி வருகிறது. இந்த நிலையில்தான் சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது எனவும் கூறப்பட்டது.
அதேவேளை யேமனில் ‘ஹவுதி கிளா்ச்சியாளா்கள்’ உருவாக்கப்பட்டதன் காரணமே
சவுதி அரேபியா – ஈரான் இடையிலான திரை மறைவில் எழுந்த ஆதிக்கப்போராகும் என்ற கருத்தும் உள்ளது.
யேமன் உள்நாட்டுப் போர் சவுதி தலைமையில் அதன் கூட்டணிக்கும் யேமனிலுள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு இடையில் நடந்து வருகிறது.
இதில் சவுதி அரேபியாவை எதிர்க்கும் ஈரான் நாடு , ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறது. அமெரிக்கா இதில் சவுதி அரேபியாவுக்கு ஆதரவளித்து வருகிறது. இருப்பினும், இது மறைமுகமாக ஈரான் மற்றும் சவுதி அரேபியாவுக்கு நடக்கும் போராகவே கருதப்படுகிறது.
அதேவேளை யேமனில் உள்ள ஹவுதிகளுக்கு எதிராக பல இடங்களில் பல நாடுகள் ஒன்றிணைந்து இவ்வருட ஆரம்பத்தில் வான் தாக்குதல்களை நடத்தியுள்ளன.
அவுஸ்திரேலியா, பஹ்ரைன், கனடா மற்றும் நெதர்லாந்தின் ஆதரவுடன் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து போர் விமானங்கள், போர்க்கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்கள் கூட்டாக இந்த தாக்குதலை மேற்கொண்டன.
ஈரான் அதிபர் ஹெலி் விபத்தில் சந்தேகம் ?
ஈரான்-அஜா்பைஜான் எல்லையில் உள்ள அராஸ் நதியில் இரு நாடுகளும் இணைந்து கட்டிய 3-ஆவது அணையின் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அஜா்பைஜான் அதிபா் இல்ஹாம் அலியெவுடன் ஈரான் அதிபா் இப்ராஹிம் ரய்சி பங்கேற்றாா்.
இஸ்ரேலுடன் ஈரான் பகைமை கொண்டுள்ள நிலையில் இஸ்ரேலுடனான அஜா்பைஜானின் ராஜீய உறவு, ஈரான் தலைநகா் டெஹ்ரானில் உள்ள அஜா்பைஜான் தூதரகம் மீது துப்பாக்கிச்சூடு தாக்குதல் ஆகிய காரணங்களால் ஈரான்-அஜா்பைஜான் இடையிலான உறவில் கடும் விரிசல் ஏற்பட்டுள்ளது. எனினும், அணை திறப்பு நிகழ்ச்சியில் இல்ஹாமும் ரய்சியும் ஒன்றாகப் பங்கேற்றனா்.
மோசமான வானிலை காரணமாக அதிபர் சென்ற ஹெலிகாப்டர் அஜர்பைஜானின் ஜோல்ஃபா பகுதியில் மலை முகடுகளில் மோதி நொறுங்கி தீப்பிடித்தது. விபத்து நடந்து 17 மணி நேரத்திற்கு பிறகு ஹெலிகாப்டரின் உடைந்த பாகங்கள் கண்டறியப்பட்டன.
தொடர் மழை காரணமாக விபத்து நடந்த இடத்தை கண்டுபிடிப்பதில் தாமதம் ஏற்பட்டிருந்தது. 15 மணி நேரம் கழித்தே விபத்து நடந்த இடத்தை மீட்புப்பட நெருங்கியது. வனம் மற்றும் மலைப் பகுதியில் கடும் போராட்டத்திற்கு பின் ஹெலிகாப்டரின் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன.
விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டர் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. பாதுகாப்புக்கு சென்ற 2 ஹெலிகாப்டர் குறிப்பிட்ட இடத்துக்கு சென்றபோதிலும் ஈரான் அதிபர் ஹெலிகாப்டர் மட்டுமே விபத்தில் சிக்கியது.
ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் பலியாகி உள்ள நிலையில் இஸ்ரேல் நாட்டு உளவு அமைப்பான மொசாத் மீது பலத்த சந்தேகங்கள் எழுந்து வருகிறது. இது இஸ்ரேல் வேலையாக இருக்குமோ என்ற விவாதம் எழுந்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *