மட்டக்களப்பில் முள்ளிவாய்க்கால் கஞ்சியை கேலிசெய்யும் செயற்பாடுகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் (Batticaloa) முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்குவதை கேலி செய்யும் வகையில் சில பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

வடக்கு கிழக்கு உட்பட நாட்டின் பல பகுதிகளில் கடந்த மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

இந்த நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் ஒன்றான முள்ளிவாய்க்கால் கஞ்சி குறித்து மட்டக்களப்பின் சில பகுதிகளில் இவ்வாறு சுவரொட்டிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

கேலியான வசனங்கள்

குறித்த சுவரொட்டிகளில் “நீங்கள் இன்னமும் ஏமாந்து கொண்டிருக்கின்றீர்களா?” என தலைப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் “வாருங்கள் கஞ்சி குடியுங்கள், எனக்கு மேலும் டொலர்களை பெற்றுத் தாருங்கள்“, “தமிழ் மக்களுக்கு துரோகம் செய்யும் டொலர் சேர்க்கும் கொள்ளையில் நீங்களும் பங்களிக்கிறீர்களா“ என்றவாறான கருத்துக்கள் அந்த சுவரொட்டிகளில் எழுதப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *