சிங்கப்பூரின் புதிய பிரதமராக லாரன்ஸ் வாங் பதவியேற்பு

சிங்கப்பூரின் நான்காவது பிரதமராக பொருளாதார நிபுணர் லாரன்ஸ் வாங் இன்று பதவியேற்றார். சுமார் 20 ஆண்டுகள் பதவியில் இருந்த லீ சியென் தனது பதவியை துறந்த நிலையில், துணை பிரதமராக இருந்த லாரன்ஸ் வாங் இன்று சிங்கப்பூர் பிரதமராக பதவியேற்றுள்ளார்.

51 வயதான லாரன்ஸ் வாங், சிங்கப்பூரின் பிரதமராகவும், நிதி மந்திரியாகவும் பதவி வகிக்க உள்ளார். அவருக்கு சிங்கப்பூர் ஜனாதிபதி தர்மன் சண்முகரத்னம் இன்று பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். சிங்கப்பூரில், திட்டமிடப்பட்ட அரசியல் தலைமை மாற்றத்தின் ஒரு பகுதியாக இந்த பதவிப் பிரமாணம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *