தமிழினப்படுகொலைகளை போல் பலஸ்தீனத்தின் அவலங்களை வேடிக்கை பார்க்காதீர்கள்: கஜேந்திரன் காட்டம்

எங்களுடைய மண் மீது தமிழினப்படுகொலைகளை நடந்த போது அமைதியாக இருந்து வேடிக்கை பார்த்ததை போன்று பார்த்துக் கொண்டிருக்காமல் உடனடியாக தலையிட்டு பலஸ்தீனம் மீதான அவலங்களை தடுக்குமாறு செல்வராசா கஜேந்திரன் (S. Kajendran) ஐ.நாவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற பலஸ்தீனின் (Palestine) தற்போதைய நிலை தொடர்பாக சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையை முன்மொழிந்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், ” மே 18 தமிழர்களின் வாழ்வில் மறக்க முடியாத வடுக்களை சுமந்த நாளாகும். ஆனால் இன்றைய அரசாங்கம் எமது உறவுகளை நினைவு கூறுவதை தடுத்து நிறுத்துகிறது.

பல ஆயிரம் தொலைவில் உள்ள பலஸ்தீனத்திற்க்காக பிரேரணை விவாதம் நடத்தும்  இலங்கை அரசு ஏன் எமது தமிழர்களில் உரிமைகளை முடக்குகிறது?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், தமிழ் தேசியம் மீது மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பு தொடர்பில்  இலங்கை அரசு எவ்வித கரிசனையும் மேற்கொள்ளவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *