காசாமீதான இஸ்ரேலின் யுத்தத்திற்கு அமெரிக்காவின் உதவி தார்மீக காயங்கள்ஏற்படுத்தியது – பதவியை இராஜினாமா செய்த அமெரிக்காவின் புலனாய்வு பிரிவு அதிகாரி

காசாமீதான இஸ்ரேலின் யுத்தத்திற்கான அமெரிக்காவின் ஆதரவு பாலஸ்தீனியர்களிற்கு ஏற்பட்டுள்ள தீமைகள் காரணமாக ஏற்பட்ட தார்மீக காயம் காரணமாக அமெரிக்காவின் புலனாய்வு பிரிவிலிருந்து இராஜினாமா செய்ததாக அமெரிக்க புலனாய்வு அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்

நவம்பரில் தனது பதவியை இராஜினாமா செய்த இராணுவமேஜர் ஹரிசன் மான்  இது குறித்து திங்கட்கிழமை தனது சகாக்களிற்கு எழுதியுள்ள கடிதத்தில் தனது தார்மீக காயம்குறித்து குறிப்பிட்டுள்ளார்.

எனது இராஜினாமாவிற்கான காரணங்களை அச்சம் காரணமாக நான் பல மாதங்களாக தெரிவிக்கவில்லை  தொழில்முறை விதிமுறைகளை மீறுவது நான் பெரிதும் மதிக்கும் எனது சிரேஸ்ட அதிகாரிகளிற்கு ஏமாற்றத்தை ஏற்படுத்துவது நான் துரோகம் செய்துவிட்டேன் என நீங்கள் கருதுவீர்கள் என பல அச்சங்களால் இராஜினாமாவிற்கான காரணத்தை முதலில் தெரிவிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பாலஸ்தீனியர்கள் பாரியளவில் படுகொலை செய்வதற்கு காரணமான அமெரிக்காவின் கொள்கைகளை முன்னெடுக்க உதவுவது குறித்து வெட்கம் அடைந்தேன் குற்றவுணர்வினால் பாதிக்கப்பட்டேன் எனவும் ஹரிசன்மான் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *